The Indian team today recorded the worst total in Test history.

December 19, 2020
The Indian team today recorded the worst total in Test history.

English:

India, who lost all their wickets for 36 runs in the first Test against Australia today, set a record for the lowest total of runs in Test history.

The first match of the four-match Test series against India and Australia kicks off on the 17th with a day and night match at Adelaide. Indian captain Virat Kholi won the toss and elected to bat first. India in the first innings loosed all the wickets for 244 runs.

Captain Virat Kohli scored 74, Cheddar Pujara 43 and Ajinkya Raghane 42. Mitchell Stock took 4 wickets in the Australian innings.

The Australians then started their first innings, losing all their wickets for 191 runs.

Team captain Tim Payne was unbeaten on 73 and Manas Labuchen on 47. Ravichandran Ashwin took 4 wickets in the innings.

India, who started their second innings with a 53-run lead, were bowled out for 36 runs by the Australian bowlers. Mayan Agarwal was the team’s leading run-scorer with 9 runs.

Josh Hazlewood took 5 wickets and Pet Cummins took 4 wickets. India’s 42 runs against England in 1974 is the lowest team total of runs scored in a Test match. But today it was beaten by the Australian bowlers to take out the Indian team for a poor 36 runs.

The Australians then went on chase to win by 90 runs, losing only 2 wickets. Tim Paine was chosen as the man of the match.

The 2nd Test between the two teams starts on the 26th in Melbourne.

தமிழ்:

இந்திய அணி டெஸ்ட் வரலாற்றில் அதி குறைந்த ஓட்;ட எண்ணிக்கையேனும் மோசமான சாதனையை இன்று பதிவு செய்தது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியி;ல் 36 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்த இந்திய அணி டெஸ்ட் வரலாற்றில் அதி குறைந்த ஓட்;ட எண்ணிக்கையேனும் மோசமான சாதனையை இன்று பதிவு செய்தது.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கடந்த 17 ஆம் திகதி எடிலைட்டில் பகல் இரவு போட்டியாக ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றது. அணி தலைவர் விராட் கொஹ்லி 74 ஓட்டங்களையும் செட்டிசர் புஜாரா 43 ஓட்டங்களையும் அஜீங்கியா ரகானே 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். அவுஸ்திரேலிய பந்து வீச்சில் மிச்சல் ஸ்டாக் 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார். பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 191 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

அணி தலைவர் டிம் பெயின் ஆட்டமிழக்காது 73  ஓட்டங்களையும் மானஸ் லபுச்சேன் 47 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் ரவிசந்திரன் அஸ்வின் 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார். 53 ஓட்டங்கள் முன்னிலை பெற்று தமது 2 வது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி அவுஸ்;திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது 36 ஓட்டங்களுக்கு சுருண்டது. அணியிpன் அதி கூடிய ஓட்ட எண்ணிக்கையாக 9 ஓட்டங்களை மயன் அகர்வல் பெற்றுக் கொடுத்தார்.

ஜோஸ் அசல்வுட் 5 விக்கட்டுக்களையும் பெட் கமின்ஸ் 4 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர். இந்திய அணி கடந்த 1974 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக பெற்றுக் கொண்ட 42 எனும் ஓட்ட எண்ணிக்கையை டெஸ்ட் போட்டிகளில் பெற்றுக் கொண்ட அதி குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும். இன்றைய தினம் அவுஸ்திரேலியாவிடம் 36 ஓட்டங்களுக்கு சுருண்ட இந்தியா மோசமான சாதனையை தனதாக்கியது.

பின்னர் 90 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்;பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 2 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக டிங்பெயின் தெரிவானார். இரு அணிகளுக்கும் இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி மெல்பேனில் ஆரம்பமாகவுள்ளது.

Sri Lankan Sports TV

Welcome to Sri Lankan Sports TV

Welcome to Sri Lankan Sports TV! Please enter your credentials to access exclusive sports content and live broadcasts.

Lost your password? Please enter your email address. You will receive mail with link to set new password.