South Africa beat India in the second T20i
இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி!!
கட்டாக்கில் (12.06 2022) நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணியை தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தொடரின் இரண்டாவது போட்டி கட்டாக் பாராபதி மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே பறிகொடுத்தது.
இருப்பினும் அடுத்து களத்தில் நின்ற இஷான் கிஷான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்டத்தை சீராக உயர்த்தினர்.அதற்கமைய 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது. அதிகப்பட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
ஆட்டத்தின் 14வது ஓவரில்களம் கண்ட தினேஷ் கார்த்திக் ர்.முதல் 16 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் கடைசி ஓவரில் கடைசி 5 பந்தில் மட்டும் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என மொத்தம் 21 ரன்களை அவர் எடுத்தார்.இறுதிவரை ஆட்டமிழக்காமல் தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, தொடக்க வீரரான டெம்பா பாவுமாவை தவிர மற்ற முன்னணி வீரர்கள் அனைவரையும் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சீரான இடைவேளியில் பறிக்கெடுத்தது.
இருப்பினும் 5வது விக்கெட்க்காக அணி தலைவர் டெம்பா பாவுமாவுடன் இணைந்த ஹென்ரிச் கிளாசென் இந்திய அணியின் பந்துவீச்சை விலாசி 46 பந்துகளில் 81 ஓட்டங்கள் குவித்தார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 18.2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 149 ஓட்டங்கள் என்ற வெற்றி இழக்கை எட்டியது.
தொடரின் முதல் போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஹென்ரிச் கிளாசென் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.