கோல் கிலேடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி முதலாவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் ஜப்னா ஸடேலியன்ஸ் அணி ச்சம்பியன் ஆனது.

இலங்கையின் முதலாவது பிரிமியர் லீக் T20 தொடரான லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி ஜப்னா ஸடேலியன்ஸ் மற்றும் கோல் கிலேடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது

கோல் கிலேடியேட்டர்ஸ் அணியை பொறுத்தவரை லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 4ம் இடத்தை பிடித்து அரையிறுதிக்கு தெரிவாகி புள்ளிபட்டியலில் முதலிடத்தில் இருந்த பலம்வாய்ந்த கொழும்பு கிங்ஸ் அணியை அரையிறுதி போட்டியின் இறுதி ஓவரில் அபாரமாக வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
அணியின் தலைவராக இருந்த சஹீட் அப்ரிடி தனிபட்ட காரணங்களுக்காக மீண்டும் பாகிஸ்தான் திரும்பிய நிலையில் பானுக ராஜபக்ஸ அணியை வழி நடத்தினார்.

ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியை பொறுத்தவரை. திசெர பெரேரா தலைமையில் இத்தொடரில் பலம்வாய்ந்த அணியாக செயற்பட்டது. இடையில் இந்த அணி சற்று தடுமாறினாலும். புள்ளி பட்டியலில் 3ம் இடத்தை பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் தம்புள்ள வைக்கிங் அணியை வெற்றிகொண்டது.

இந்த நிலையில் இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை குவிப்பார்கள் என்று எதிபார்த்த போதும் கொல் அணியின் ஆரம்ப பந்து வீச்சாளர்கள் குறிப்பாக மொஹமட் அமீர் போன்றோர் ஜப்னா அணியை ஓட்டங்கள் குவிக்க விடாமல் சிறப்பாக பந்து வீசினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த சொயிப் மலிக் மற்றும் தனஞ்ஜய டி சில்வா ஆகியோர் சுழல்பந்து வேகபந்து என சகலவற்றையும் சிறப்பாக கையாண்டு 50 ஓட்ட இணைப்பாட்டம் வழங்கி அணிக்கு வலு சேர்க்க. பின்னர் களமிறங்கிய அணிதலைவர் திசெர பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 14 பந்துகளில் 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க ஜப்னா அணி 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

முதலாவது லங்கா பிரிமியர் லீக் தொடரில் ச்சம்பியன் மகுடம் சூட 20 ஓவர்களில் 189 ஓட்ங்களை பெறவேண்டும் என்ற நிலையில் களமிறங்கிய கோல் அணியின் முதலாவது விக்கட்டாக இத்தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த தனுஷ்க்க குணதிலக்க ஒரு ஓட்டத்துடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

பவர்பிலே ஓவர்களில் கோல் அணி 3 விக்கட்டுகளை இழந்து 30 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. ஆனால் அணித்தலைவர் பானுக ராஜபக்ஸ உபாதைக்கு மத்தியிலும் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 17 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடங்களாக 40 ஓட்ங்களை பெற்றுக் கொடுத்தார். இடையில் அஸாம் கான் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய நிலையில் ஒலிவரின் ஒவரில் 2 பிரமாண்ட ஆறு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணிக்கு நம்பிக்கை சேர்த்த நிலையில் அதே ஓவரில் அவரும் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் போட்டியை முற்றிலும் தம்பக்கம் திருப்பிய ஜப்னா ஸடேலியன்ஸ் அணி 53 ஓட்டங்களால் கோல் கிலேடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி முதலாவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் ச்சம்பியன் ஆனது.

இத்தொடரின் வலுவான அணியான ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்கு வாழ்த்துகள்.

(Visited 55 times, 1 visits today)

You Might Be Interested In