கொவிட் 19 வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகள் ஒரு மாதகாலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

December 18, 2020
கொவிட் 19 வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகள்  ஒரு மாதகாலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 18ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.(வழமையாக இந்த காலப்பகுதியிலேயே ஆரம்பமாகும் )


எனினும் தற்போது அவுஸ்திரேலியவில் கொரோன இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரிதுள்ள நிலையில் இத்தொடரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ம் திகதி முதல் 28ம் திகதி வரை நடத்த டென்னிஸ் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.


கொரோன அச்சுறுத்தல் காரணமாக போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 14நாட்கள் தனிமைபடுத்தலில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளுக்கான தகுதி சுற்றுப்போட்டிகள் எதிர்வரும் ஜனவரி 10ம் திகதி முதல் 13திகதிவரை கட்டார் தலைநகர் தோஹாவில் நடைபெறவுள்ளது.

இதன் பின்னர் வீரர்கள் அனைவரும் மெல்போர்னில் தனிமைப்படுத்தப்பட்டு.பின்னர் பாதுகாப்பு வலையத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர். அதன் பின்னரே பெப்ரவரி 8ம் திகதி போட்டிகள் ஆரம்பம் ஆகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.